சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கு

Sunday, 10 November 2019 - 19:43

+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
அடுத்த வருடம் சுற்றுலாப்பயணிகளின் வருகை இலக்கானது 25 இலட்சமாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஜேர்மன் பிரங்பேர்ட் நகருடனான நேரடி வானூர்தி சேவையினை ஆரம்பிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
 
இந்த விடயம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜேர்மன் அதிகாரிகளுடன் விரைவில் ஆரம்பிக்கப்பட்வுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்திருந்த போதிலும் தற்போது வெளிநாட்டு பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்தநிலையில் இந்த வருட இறுதிக்குள் 20 இலட்சம் என்ற இலக்கை எட்ட முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.