தூசுப் படிமங்களின் செறிவு அதிகரிக்கக்கூடும்

Wednesday, 13 November 2019 - 7:53

%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81++%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் இன்றும் தூசுப் படிமங்களின் செறிவு  அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கட்டிட ஆய்வு பணிமனையின் சிரேஷ்ட நிபுணர் சரத் ப்ரேமசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு நகரின் வளி தரக்குறியீடு தற்போது 107ஆக நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தநிலைமை இன்று மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஏற்கனவே கடந்த வாரம் கொழும்பு நகரின் தூசு படிமங்களின் செறிவு 100 சதவீதத்தால் அதிகரித்து, பின்னர் வழமைக்கு திரும்பிருந்தமை குறிப்பிடத்தக்கது.