ஆசிய அபிவிருத்தி வங்கி ஊடாக இலங்கைக்கு கடனுதவி

Thursday, 14 November 2019 - 19:52

%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF
ஆசிய அபிவிருத்தி வங்கியினால், இலங்கையில் பாதை அபிவிருத்தி பணிகளுக்கான கடனுதவி வழங்கப்படவுள்ளது.

இதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கவுள்ளது.

இதன் கீழ் 3400 கிலோமீற்றர் அளவான பின்தங்கிய பகுதிகளில் உள்ள வீதிகளும், 340 கிலோமீற்றர் தூரம் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளையும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதற்கான ஒப்பந்தம் கடந்த 2017ம் ஆண்டு அரசாங்கத்துக்கும், ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் கைச்சாத்தாகி இருந்தது.