காட்டுத் தீயினால் இதுவரையில் நான்கு பேர் பலி

Thursday, 14 November 2019 - 19:57

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
அவுஸ்திரேலியாவில் பரவி வருகின்ற காட்டுத் தீயினால் இதுவரையில் நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் அறிவித்தள்ளனர்.

நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நியு சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய இடங்களில் இந்த தீப்பரவல் பதிவாகியுள்ளது.

120 இடங்களில் காட்டுத் தீ பரவி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீயணைப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தீப்பரவல் மேலும் அதித்தீவிரவமாக பரவக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த தீயை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 16 வயதான சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலில் பல வீடுகள் அழிவடைந்துள்ளன.