ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீனா வாழ்த்து

Monday, 18 November 2019 - 17:10

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

அந்த வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீன அரசாங்கம் வாழ்த்துக்களை கூறியுள்ளது.

பீஜிங் நகரில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜேன் சூஹேன் இந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து இரண்டு நாடுகளுக்கிடையேயான நடைமுறையான உடன்படிக்கைகள் மூலம் சிறந்த பெறுபேற்றை பெற்று கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சீனாவின் ஒரே நோக்கம், ஒரே பாதை என்ற உயர்ரக செயற்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீட், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக முன்னேற்றம் அடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சம்பிரதாயபூர்வ நட்பு புதிய தலைமைத்துவத்தின் கீழ் தொடர்ந்தும் விருத்தியடையும் என்றும் பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இலங்கை ஜப்பானுக்கிடையேயான உறவுகளை தொடர்ந்தும் வலுப்படுத்தி கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளுக்காக இலங்கை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஜப்பானின் ஒத்துழைப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளுமாறு அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற கையுடன் முதல் வெளிநாட்டு விஜயமாக, கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கு வருகைத்தர வேண்டும் என்று, இந்திய பிரதமர் மோடி கோரி இருந்தார்.