ஜனாதிபதியிடம் அரசாங்கத்தை கையளிக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

Monday, 18 November 2019 - 19:15

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
புதிய ஜனாதிபதியிடம் அரசாங்கத்தை கையளிக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற விஷேட நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஆளும் கட்சியை அங்கத்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் சகல கட்சி தலைவர்களும், அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுவது குறித்து நாடாளுமன்ற குழுவின் நிலைப்பாடு மற்றும் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்கும் எதிர்கால செயற்பாடு தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச கலந்து கொண்டிருக்கவில்லை.