இனச்சாயம் பூசப்படுவது அநீதியானது...

Wednesday, 20 November 2019 - 12:54

%E0%AE%87%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81...
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் அளித்த வாக்குகளுக்கு இனச்சாயம் பூசப்படுவது அநீதியானது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் த ஹிந்து பத்திரிகைக்கு தெரிவித்திருக்கிறார்.

கடந்த தேர்தலில் வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் தமிழ் மக்கள் பெரும்பாலானவர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தனர்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இரண்டு பேருமே பெரும்பான்மை சமுகத்தைச் சேர்ந்தவர்கள்.

பொருளாதாரம் சார்ந்த விடயங்களை அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டையே முன்வைத்திருந்தாலும், சிறுபான்மை மக்களது பிரச்சினை தீர்வு விடயத்தில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க நேர்ந்தது.

தமிழ் மக்கள் இனத்துவேசமாக நடந்துக் கொண்டிருப்பார்களாக இருந்தால் அவர்கள் சுயாதீன வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கே வாக்களித்திருப்பார்கள்.

ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்று இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார்.