முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று...

Friday, 06 December 2019 - 13:42

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...
இதேவேளை, இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று இரவு 7.00 மணிக்கு ஐதரபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா ஒரு ஆறு ஓட்டத்தை பெற்றுக்கொள்ளும் சந்தரப்பத்தில் முத்தரப்பு கிரிக்கட் போட்டிகளில் 400 ஆறு ஓட்டங்களை பெற்றுக்கொள்ளும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுக்கொள்ளவுள்ளார்.

இந்த பட்டியலில் 534 ஆறு ஓட்டங்களை பெற்று மேற்கிந்த தீவுகள் அணியின் கிரிஸ்கெய்ல் முதல் இடத்திலும், 476 ஆறு ஓட்டங்களை பெற்று சைட் அப்ரிடி இரண்டாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த போட்டியிலிருந்து, சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பந்துவீச்சு எல்லைக்கோட்டைத் தாண்டி வீசப்படுகின்ற பந்துகளை கண்காணித்து அனுமதியற்ற பந்தாக அறிவிக்கும் பொறுப்பு, மூன்றாம் நடுவருக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.