நீதிமன்றத்தின் உத்தரவு அரசியல் ரீதியானது..

Saturday, 07 December 2019 - 17:09

+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81..
புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ப்ரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவிற்கு தொடர்ந்தும் ராஜதந்திர வரப்பிரசாதங்கள் கிடைக்கப் பெறும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெஸ்ட்;மின்ஸ்டர் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பானது அரசியல் ரீதியானது என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ப்ரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோ, அந்த தீர்ப்பிற்கு எதிராக மீளவும் மேன்முறையீடு செய்ய முடியும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி இந்த மேன்முறையீட்டை ப்ரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோ தாக்கல் செய்யலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ப்ரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோ, அந்தக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாவார் என வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

2018ம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள உயர்ஸ்தானிகரத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் அவர் சைகை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த போதும், இராஜதந்திர சிறப்பந்தஸ்த்து கருதி அவர் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் அவர் இலங்கைக்கு மீளழைக்கப்பட்டார்.
எனினும் அவருக்கு இராஜதந்திர சிறப்பந்தஸ்த்து இருப்பதில் சந்தேகம் எழுப்பப்பட்டு மீண்டும் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

இதன்படி அவரது சைகை, அச்சுறுத்தும் வகையிலானது என்பதை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 2400 பவுண்ட்களை, அதாவது இலங்கை மதிப்பில் 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.