மகிழ்ச்சிகர செய்தி...!!

Monday, 09 December 2019 - 7:58

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...%21%21+
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம். ஃபௌசர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 40 ரூபாவாலும், 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலை 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 985 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலையானது 945 ஆகவும், 395 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலை 380 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி சீராக்கலுக்கு அமைய இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம். ஃபௌசர் குறிப்பிட்டுள்ளார்.