பதவி விலகுவாரா சுமந்திரன்..?

Monday, 09 December 2019 - 20:03

%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D..%3F+
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படாவிட்டால் தான் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சார்ந்தவர்களும் ஏனையவர்களும் முன்வைத்து வருகின்ற விமர்சனங்கள் தொடர்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐனநாயக ரீதியிலான சூழலில் எவருக்கும் எத்தகைய கருத்துக்களையும் முன்வைக்க முடியும்.

ஆகையினாலே அதனை பொருட்படுத்தாது அந்தச் சவால்களையும் நாங்கள் சந்தித்து முன்னேற வேண்டும்.

சிறிலங்கா பொதுஐன முன்னணியை சார்ந்த சிலர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக கூறியிருக்கிறார்கள்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முற்றாக கைவிடப்பட்டது என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

புதிய அரசியலமைப்பு உருவாக்க முடியாமல் போனால் பதவி விலகுவேன் என்று தான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் கைவிடப்படும் என்ற தீர்மானம் எட்டப்படுகின்ற நேரத்தில், தான் பதவி விலகுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.