புதிய இயக்குநர் நியமனம்..

Tuesday, 10 December 2019 - 17:32

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரக காரியாலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவிற்கு இராணுவ தலைமையத்தில் புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

காணி, சொத்து மற்றும் வாசஸ்தல பணிப்பாளர் சபையின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அந்த பதவிக்கான கடமைகளை இன்று அவர் ஆரம்பித்ததாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ப்ரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோ, அந்தக் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாவார் என வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் கடந்த தினம் ஒன்றில் தீர்ப்பளித்திருந்தது.

2018ம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள உயர்ஸ்தானிகரத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் அவர் சைகை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த போதும், இராஜதந்திர சிறப்பந்தஸ்த்து கருதி அவர் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் அவர் இலங்கைக்கு மீளழைக்கப்பட்டார்.

எனினும் அவருக்கு இராஜதந்திர சிறப்பந்தஸ்த்து இருப்பதில் சந்தேகம் எழுப்பப்பட்டு மீண்டும் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டது.

இதன்படி அவரது சைகை, அச்சுறுத்தும் வகையிலானது என்பதை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 2400 பவுண்ட்களை, அதாவது இலங்கை மதிப்பில் 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.