அமைச்சுகளுக்கு பொறுப்பான பணிகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

Wednesday, 11 December 2019 - 13:04

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
அமைச்சுகளுக்கு பொறுப்பான விடயதானங்களையும், பணிகளையும் உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 43 ஆவது சரத்தின் முதலாம் உறுப்புரை மற்றும் 46ஆவது சரத்தின் முதலாம் உறுப்புரை என்பனவற்றுக்கு அமைய, அமைச்சர்களுக்குரிய விடயங்கள், பணிகள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள் என்பன அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, முப்படைகள், காவல்துறை, அரச இரகசிய புலனாய்வு சேவை என்பன பாதுகாப்பு அமைச்சின்கீழ் உள்ளன.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம், அரச சார்பற்ற அமைப்புகளுக்கான செயலகம், இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை கணினி அவசர பதில் நடவடிக்கைக்கான ஒன்றியம், காலநிலை அவதான நிலையம் உட்பட 31 திணைக்களங்கள் பாதுகாப்பு அமைச்சின்கீழ் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின்கீழ் அதிகளவான திணைக்களங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

திறைசேரி, மத்திய வங்கி, இலங்கை பிணையங்கள் மற்றும் செலாவணி ஆணைக்குழு, அரச வங்கிகள் உட்பட 48 திணைக்களங்கள் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின்கீழ் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

பௌத்த, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மத அலுவல்கள் திணைக்களங்கள், கலாசார அலுவல்கள் திணைக்களங்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட 22 திணைக்களங்கள் புத்தசாசன, கலசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களம், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் உள்ளிட்ட 20 திணைக்களங்கள் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின்கீழ் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.


முழுமையான விபரங்களை தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்