பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா உதவி

Wednesday, 11 December 2019 - 14:14

%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF
யாழ்ப்பாணம்-பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு உதவித் தொகையாக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா வழங்கவுள்ளது.

நேற்று கைத்தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரங்ஜித் சிங் சந்தித்த போதே குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதேவேளை, பலாலி விமான நிலையத்தின் பயணிகளுக்கான மற்றும் பொதிகளை சோதனை செய்வதற்கான இடங்களை அபிவிருத்தி செய்வதற்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.