தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள செய்தி

Saturday, 14 December 2019 - 13:46

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பில் மாகாண சபைகள் அமைச்சு மற்றும் நீதி அமைச்சிற்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமானதை தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேற்படி விடயம் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் தங்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.