டக்ளஸ் தேவானந்தாவின் அதிரடி நடவடிக்கை...

Saturday, 14 December 2019 - 19:25

%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...
பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் எதிர்காலம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் பிரதிநிதிகளை இன்று சந்தித்த போதே அமைச்சர்; இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

கடந்த ஆட்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஜனாதிபதி தேர்தலுதக்கான திகதி அறிவிக்கப்பட்ட காலப் பகுதியில், நாடளாவிய ரீதியில் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அவர்களில் வடக்கு கிழக்கை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் அடங்குகின்றனர்.

எனினும், குறித்த நியமனங்கள் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அனைத்து நியமனங்களும் இடை நிறுத்தப்பட்டன.

தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்ட நியமனங்கள் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடாமையினால் தாம் நிர்க்கதி
நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளனர்.

அமைச்சரவையில் குறித்த நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை எடுத்துரைத்து சிறந்த தீர்வினை பெறுவதற்கு முயற்சிப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.