சரவணா ஸ்டோர் அண்ணாச்சியுடன் நடிக்கவுள்ள பிரபல நடிகை..! சம்பளம் இவ்வளவா?

Saturday, 28 December 2019 - 6:25

%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BE+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88..%21+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%3F
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணன் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் இரண்டு பாடல்கள் பல கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இன்னும் இந்த படத்தின் நாயகி உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஏற்கனவே ஒரு நடிகை நடித்து வந்தாலும் இந்த படத்தின் நாயகி கேரக்டரில் நடிக்கும் நடிகை இன்னும் நிரப்பப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி தமன்னா தான் என முடிவு செய்துவிட்டதாகவும் இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்திடப்பட்டதாகவும், இந்த படத்திற்காக தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் இதுவரை பெறாத மிகப்பெரிய தொகையை தமன்னா பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் தமன்னாவுக்கு அழுத்தமான கேரக்டர் என்றும் அந்த கேரக்டரின் முழு வடிவத்தையும் கேட்ட பின்னர் தமன்னா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Related image