Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D...
Friday, 17 January 2020 - 8:34
நிவாரண காலத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மனம்...
89

Views
சுற்றுலா பேருந்துகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குத்தகைக்கான தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்காக நிவாரண காலத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது.
 
நிதி அமைச்சுடன் அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முதலீட்டு மேம்பாட்டு சுற்றுலா விமானசேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவையை வழங்குவதற்காக 700 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
 
அவற்றில் 95 சதவீதமானவை தனியார் தொழில்துறையினருக்கு உட்பட்டதாகும்.
 
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் சுற்றுலா துறைக்கு பெரும் தாக்கம் ஏற்பட்டதுடன். அந்த துறையில் ஈடுபட்டிருந்த பேருந்து  உரிமையளர்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
 
குத்தகை தவணைப் பணத்தை செலுத்த முடியாத காரணத்தினால், சில பேருந்துகள், குத்தகை நிறுவனங்களினால் பொறுப்பேற்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, தமக்கு நிவாரண காலமொன்றை வழங்குமாறு அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top