Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF..%21
Saturday, 18 January 2020 - 7:52
அரச நிறுவனங்கள் தொடர்பில் மீண்டும் அவதானம் செலுத்தியுள்ள ஜனாதிபதி..!
3,479

Views
வாடிக்கையாளர்கள், சேவை வழங்குநர்களிடம் செல்வதற்கு பதிலாக இணையத்தினூடாக அந்த சேவைகள் மற்றும் அனுமதிகளை வழங்கும் முறையொன்றினை விரைவில் உருவாக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அதற்கமைய, சகல அரச நிறுவனங்களிலும் உள்ள தரவுகள், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பூரண பங்களிப்புடன் ஒன்று திரட்டப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மக்களுடன் மிக நெருக்கமாக செயற்படும் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் முன்னுரிமையளித்து அந்த தரவு வலையமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

இந்த புதிய முறையில் தொழிநுட்பம் மற்றும் இணைய வழி பாவனையினூடாக, அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டு, பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை பதிவு செய்தல் மற்றும் அரச காணி உறுதிகள் உள்ளிட்ட பல துறைகளில் உடனடி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவுகளை ஒரே வலையமைப்பில் கொண்டு வருவதனூடாக நேரத்தை மீதப்படுத்தி, வினைத்திறனின்மை மற்றும் ஊழல் என்பனவற்றைத் தடுக்க முடியும் என்பதை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

வரி அறவிடுதல் முதல் ஓய்வூதிய கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் போன்ற அனைத்து துறைகளின் செயற்பாடுகளையும் தன்னிச்சையாக நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளித்தல் இதன் முதன்மை எதிர்பார்ப்பாகும்.

அனைத்து தரவுகளும் ஒன்று திரட்டப்பட்டிருப்பதனால் நாட்டிற்கு அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடிய தீர்மானங்களை மேற்கொள்ளும் போது சரியான பகுப்பாய்வினை மேற்கொள்ள முடியுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள், தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில், அரச நிறுவனங்களில் ஏற்படும் தாமதங்களை உடனடியாக தவிர்த்துக் கொள்ளவும் இதனூடாக வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

1919 அரச தகவல் மையத்தினூடாக மக்களுக்கு தகவல்களை வழங்கும் செயற்பாட்டினை மீண்டும் செயற்திறனாக்குதல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அரச சேவையில் உள்ள திறமையானவர்களை மிகத் துரிதமாக இனங்கண்டு, திறன்கள் குழுவொன்றினை உருவாக்குவதற்கான தேவையை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

அதற்கான பரிந்துரைகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

தகவல் தொழிநுட்பம் மற்றும் தத்தமது துறைகளில் உள்நாட்டு, வெளிநாட்டு பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதனூடாக, திறமையான அரச சேவையாளர்களையும் சிறந்த அரச சேவையினையும் உருவாக்க முடியும்.

இணைந்த சேவையில் மாத்திரமன்றி, ஏனைய அரச சேவையாளர்களும் வெவ்வேறு அரச நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெறுவதற்கான பொதுவான கொள்கை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும்.

இதனூடாக பல துறைசார்ந்த அனுபவங்களுடன்கூடிய முழுமையான அரச சேவையாளர்களை உருவாக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மாபெரும் சித்திரக் கண்காட்சி
Wednesday, 12 February 2020 - 12:53
மலையகத் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் கலை, கலாசார, பண்பாட்டு... Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
9 Views
HiruNews
HiruNews
HiruNews
78,477 Views
HiruNews
HiruNews
HiruNews
26,174 Views
HiruNews
HiruNews
HiruNews
55,313 Views
HiruNews
HiruNews
HiruNews
270 Views
HiruNews
HiruNews
HiruNews
122,253 Views
Top