ரோஹித், கோலி, சமி அபாரம்- தொடரை கைப்பற்றியது இந்தியா..!

Sunday, 19 January 2020 - 21:16

%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%2C+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%2C+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE..%21
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் தீர்மானமிக்க போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஸ்டீவ் ஸ்மித் 131 ஓட்டங்களையும், லபுஸ்சாக்னே 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமட் சமி 4 விக்கெட்டுக்களையும் ஜடேஜா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மா 119 மற்றும் விராட் கோலியின் 89 ஓட்டங்களின் உதவியுடன் 47.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தெரிவானதோடு, தொடரின் நாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவானார்.