மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் ..

Monday, 20 January 2020 - 19:43

%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+..
நீதிமன்ற நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்துஇ எவராவது ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்குமாயின் அழுத்தம் வழங்கியவருக்கும் அந்த தவறை இழைத்த நீதிபதிக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில்இ ஊடுக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குரல் பதிவுகள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு மரண தண்டனை விதிக்குமாறு நீதிபதி ஒருவரிடம் கூறமுடியுமாயின்இ அவ்வாறு கூறியவருக்கும்இ தண்டனை விதித்தவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும்.

மற்றுமொரு மனித கொலைக்கு சிகரான குற்றச்சாட்டு இதுவாகும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு தீர்ப்பிலும் நீதிமன்ற விடயத்தில் தலையீடு செய்யப்பட்டுள்ளமை மிகத் தெளிவாக புலனாகிறது.

முன்னாள் ஜனாதிபதியும்இ முன்னாள் பிரதமரும் அந்த விடயத்தில் தலையிட்டுள்ளமை தெரியவருவதாக ஊடக பிரதானி ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர்இ அதுதான் மிகவும் பாரிய நிலையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி அடுத்த தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பிரதமர்இ அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.