டோர்-எம் 1 ரக ஏவுகணைகளே உக்ரைன் விமானத்தை தாக்கியது- ஈரான் விளக்கம்

Tuesday, 21 January 2020 - 10:34

%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D+1+%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87+%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஈரான் ராணுவத்தினால் தவறுதலாக சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம் டோர்-எம் 1 என்ற இரண்டு குறுகிய நிலை ஏவுகணைகளால் தாக்கப்பட்டது என ஈரான் சிவில் விமான அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விமான விபத்து தொடர்பில் ஈரான் நேற்று விளக்கமளித்துள்ளது.

உக்ரைன் விமான விபத்தில் தொடர்புடையர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்தார்.
 
இந்நிலையில், மனித தவறுகளின் காரணமாக சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம்  டோர்-எம் 1 என்ற இரண்டு குறுகிய நிலை ஏவுகணைகளால் தாக்கப்பட்டது என ஈரான் சிவில் விமான அமைப்பு தெரிவித்துள்ளது.