Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21+
Tuesday, 21 January 2020 - 10:51
விஜய்யுடன் நடிக்க மறுத்த ஸ்ரீ தேவியின் மகள்..!
986

Views
மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் தென்னிந்திய மொழிகளில் முதன் முதலாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக விஜய் தேவர்கொண்டா நடிக்கவிருக்கும் பைட்டர் (fighter) படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளிவந்திருந்தது.

பூரி ஜெகநாத் இயக்கும் இப்படம் தெலுங்கு, இந்தி என இரு மொழிகளிலும் உருவாகிறது. இந்தியில் இந்த படத்தை கரண் ஜோஹர் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தை நடிகை சார்மியும் புரி ஜெகநாத்தும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகை ஜான்வி கபூர் அறிமுகமாகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே விரைவில் இப்படம் குறித்த அதிகார்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for janhvi kapoor

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top