Hirunews Logo
%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 22 January 2020 - 20:18
கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை தெரிவித்துள்ள விடயம்
49

Views
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 19 ஆயிரத்து 394 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அதிக பட்சமாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வரையில் இழப்பீடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்த முடியாத இயற்கை பேரழிவுகளால் சேதமடைந்த நெல், சோளம், சோயா, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு இதன் கீழ் நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top