Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
Wednesday, 22 January 2020 - 21:47
மெத்யூஸின் இரட்டைச் சதத்துடன் நான்காம் நாள் ஆட்டம் நிறைவு
164

Views
இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் ஹராரே மைதானத்தில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பாடி வரும் சிம்பாம்வே அணி இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 515 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக எஞ்சலோ மெத்யூஸ் தனது முதலாவது கன்னி இரட்டைச் சதத்தைப் பெற்றார். மேலும் குசல் மென்டிஸ் 80 ஒட்டங்களையும் தனஞ்சய டி சில்வா மற்றும் டிக்வெல்ல ஆகியோர் தலா 63 ஓட்டங்கள் வீதம் பெற்றனர்.

சிம்பாம்வே அணியின் பந்துவீச்சில் நியாசி மற்றம் ஷிகந்தர் ராசா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இலங்கை அணியை விட சிம்பாம்வே அணி 127 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. சிம்பாம்வே அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாளை போட்டியின் ஐந்தாவது நாளாகும்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top