விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள மனு...

Thursday, 23 January 2020 - 16:30

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81...
முத்துராஜவெல சரணாலயத்தில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள உயர் நிதிமன்றம் இன்று முடிவு செய்தது.

அதன்படி, குறித்த மனுவை எதிர்வரும் மே மாதம் 28 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை சரணாலயத்தில் குப்பைகள் கொட்டப்படுவதனை தடுப்பதற்காக கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மனுவானது முத்துராஜவெல பகுதியை சேர்ந்த 35 பேரால் தாக்கல் செய்யப்பட்டது என்பதும்  குறிப்பிட்டுக்காட்கூடிய விடயமாகும்.