கையூட்டல் பெற்ற கல்வி பணிப்பாளருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..

Thursday, 23 January 2020 - 17:09

%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
கடந்த 2011 ஆம் ஆண்டு  இரண்டு லடசம் ரூபாய் கையூட்டல் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட நிக்கவெரட்டிய வலையத்தின் முன்னாள் கல்வி பணிப்பாளருக்கு நீதிமன்றம் 10 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கல்வி பணிப்பாளர் பெண் ஒருவருக்கு அரச வங்கி ஒன்றில் தொழில் பெற்று தருவதாக  3 லட்சம் ரூபாய் கையூட்டல் கோரியதாகவும்,அதில்  2 லட்சம் ரூபாய் பணத்தை  வாங்கும் போது கையூட்டல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.