நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை பயன்படுத்தாது நாடாளுமன்றத்திற்கு வெளியே கருத்து வெளியிடுமாறு ஹிருதலைவர் ரேனோர் சில்வாவினால் ரஞ்சன் மற்றும் ஹிருனிக்காவிற்கு சவால்

Thursday, 23 January 2020 - 19:03

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரேனோர் சில்வாவிற்கும் ஹிரு ஊடக வலையமைப்பிற்கும் எதிராக அண்மையில் உண்மைக்கு புறம்பான போலியாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன்ராமநாயக்க மற்றும் ஹிருனிக்கா பிரேமசந்திர ஆகியோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மக்களுக்கு சேவையாற்றுவதாக கூறி பொதுமக்களின் வாக்குகள் மூலம் தெரிவாகி மக்களின் பிரச்சினைகளை புறந்தள்ளி நாடாளுமன்றில் அநாகரீகமாக வெளியிட்ட அந்த கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரேனோர் சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தி காகித அட்டை வீரர்களை போன்று கருத்து வெளியிடுவதை தவிர்த்து முடிந்தால் நாடாளுமன்றத்திற்கு வெளியே அந்த கருத்துக்களை அதேபோன்று வெளியிடுமாறு ரேனோர் சில்வா அவர்களிடம் சவால் விடுத்துள்ளார்.

அவ்வாறு கருத்து வெளியிடப்பட்டால் அந்த தருணத்திலேயே நீதிமன்றத்தின் முன் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரேனோர் சில்வா தெரிவித்துள்ளார்.

எந்தவித தேடல்களும் இன்றி அந்த போலி கருத்துக்களை வெளியிட்ட தொலைக்காட்சி ஊடகத்திற்கு எதிராக தமது கீர்த்தி நாமத்திற்கு ஏற்படுத்திய அபகீர்த்திக்காக ஒரு பில்லியன் நட்டஈடு கோரி சட்டக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ரேனோர் சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் கருத்துக்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வரப்பிரசாதகங்களை பயன்படுத்தி போலியான கருத்துக்களை நாடாளுமன்றத்திற்கு உள்ளே வெளியிடுகின்றனர்.

முடிந்தால் நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்த கருத்துக்களை அதேபோல் வெளியிடுமாறும் அவ்வாறு கருத்துவெளியிடப்படும் தருணத்திலே தமது கீர்த்தி நாமத்திற்கு ஏற்படுத்திய அபகீர்த்திக்காக கடும் சட்ட நடவடிக்கை செயற்பாடுகளுக்கு முகங்கொடுத்து பில்லியன் கணக்கான நட்ட ஈட்டை செலுத்த தயாராகுமாறும் ரேனோர் சில்வா குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சவால் விடுத்துள்ளார்.