Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81++%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81...
Friday, 24 January 2020 - 7:57
சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து...
1,158

Views
சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக பெய்ஜிங் மற்றும் ஹொங்கொங்கில் முன்னெடுக்கவிருந்த சந்திரப் புத்தாண்டு  கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
சீனாவின் வுஹான் மற்றும் ஹூபே மாகாணங்களில் அனைத்துப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஹூபேயின் தலைநகரான 11 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட வுஹானிலேயே கொரோனா வைரஸ் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.

அத்துடன் குறித்த வைரஸ் தொற்று காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதோடு 600க்கும் மேற்பட்டோர் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு;ள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டு பிரஜைகளும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
தேநீர்ச் சாலைகள், திரையரங்குகள் மற்றும் கண்காட்சிகள் என்பன மூடப்பட்டுள்ளன.
 
நகரில் முகமூடி அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மக்கள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top