எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Friday, 24 January 2020 - 15:55

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+7%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
கைதுசெய்யப்பட்ட தாய்நாட்டுக்கான இராணுவ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊடக சந்திப்பு ஒன்றில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தி அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க ககேபொல முன்னிலையில் அவர் பிரசன்னபடுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேநேரம், அஜித் பிரசன்னவின் உளவியல் நிலை தொடபான மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டதன் பின்னர், குற்றப் பத்திரம் தாக்கல் செய்வதற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில், ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களம், அஜித் பிரசன்னவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.