சீனாவிலிருந்து அவுஸ்திரேலியாவை அடைந்த கொரோனா வைரஸ்

Saturday, 25 January 2020 - 9:51

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+
தற்போது சர்வதேச நாடுகளின் அவதானத்திற்கு உள்ளான விடயங்களில் கொரோனா வைரஸ் தொற்றும் ஒன்றாகும்.

சீனாவில் உருவெடுத்த குறித்த வைரஸ் தொற்றானது தற்போது பல்வேறு நாடுகளையும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

அனைத்து நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவருக்கு மேற்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 19ஆம் திகதி சீனாவில் 2 வாரங்கள் தங்கியிருந்து மெல்பர்ன் நகருக்கு வந்த அவுஸ்திரேலியர் ஒருவருக்கே தற்போது குறித்த கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்படி நோயாளி தனிமையில் உள்ளதாகவும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவுஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.