ஐ.டி.எச் மருத்துவமனையில் உள்ள நால்வர் தொடர்பில் சற்று முன் வெளியானது மருத்துவ பகுப்பாய்வு அறிக்கை

Monday, 27 January 2020 - 10:42

%E0%AE%90.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அங்கொட தேசிய தொற்று நோய் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்ட நான்கு நோயாளர்களுக்கும் அந்த வைரஸ் நோய் ஏற்படவில்லை என மேற்கொண்ட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்கேத்திற்கிடமான நோய் அறிகுறிகளால் மூன்று சீன நாட்டவர்களும் இலங்கையர் ஒருவரும் நேற்றும், நேற்று முன்தினமும் ஐ.டி.எச் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் தொடர்பில் மேற்கொள்ளளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என தெரியவந்ததுடன் அது குறித்த அறிக்கை இன்றைய தினம் வெளியிடப்பட்டது.

அத்துடன் மலேஷியாவின் கொலாலாம்பூரில் இருந்து நேற்றைய தினம் இலங்கை வந்த இந்தோனேஷிய பெண் ஒருவரும் பாகிஸ்தான் பிரஜை ஒருவரும் காய்ச்சல் அறிகுறிகள் காரணமாக ஐ.டி.எச் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் அவர்களது குருதி மாதிரிகள் பொரளை மருத்துவ ஆய்வு நிறுவகத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்திற்கு அமைய 10 நோயாளர்கள் ஐ.டி.எச் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 7 வெளிநாட்டவர்களும் 3 இலங்கையர்களும் அடங்கியுள்ளதாக அந்த மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரேனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு, தொற்று நோய் பிரிவு, வெளிவிவகார அமைச்சு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட பல பிரிவுகள் தற்போது விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன.

எமது செய்தி பிரிவிற்கு இது தொடர்பான விபரங்களை வழங்கிய சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அணில் ஜயசிங்க, இதுவரை கொரொனா வைரஸ் தாக்கம் இலங்கையில் ஏற்படவில்லை என குறிப்பிட்டார்.

எனினும் குறித்த வைரஸ் மாத்திரமின்றி நாட்டில் வேறு ஏதேனும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் மருத்துவ ஆய்வு நிறுவகம் ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய தேசிய செயற்பாடு குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் கூடவுள்ள அந்த குழுவில் குறித்த நோய் தாக்கத்தை குறைப்பதற்கான யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அணில் ஜயசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரொனா வைரஸ் தொற்று காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருவோர் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் சந்தேகத்திற்கிடமான நோய்த்தாக்கங்களில் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களை ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதேநேரம், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட கருமபீடம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.