மோட்டார் வாகன பதிவுகள் அதிகரிப்பு

Tuesday, 28 January 2020 - 13:48

%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கடந்த வருடத்தின் டிசம்பர் மாத்தில் மோட்டார் வாகனப் பதிவுகள் சற்று அதிகரித்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 2030 வாகன பதிவுகள் இடம்பெற்றிருந்த அதேவேளை டிசம்பர் மாதத்தில் அது 2057ஆக அதிகரித்து காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், 2018ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் 2669 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், டிசம்பர் மாதத்தில் முச்சக்கர வண்டிகளின் பதிவுகள் கணிசமான அளவு குறைந்துவிட்டதாகவும் வாகன முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.