சர்வதேச மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Tuesday, 28 January 2020 - 19:52

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
சீனாவில் பரவிவரும் உயிர்கொல்லி நோயான கொறோனா வைரஸ் தொற்றை உலகில் இருந்து உடனடியாக இல்லாதொழிக்க முடியாது என சர்வதேச மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கொறோனா வைரஸ் குறைந்தபட்சம் சில மாதங்களுக்கு உலகம் முழுவதும் பரவக்கூடிய வாய்ப்புள்ளதாக கனடாவின் ரொறண்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் ஃபிஷ்மேன் தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பது அவரது கருத்தாகும்.

இதேவேளை, கொறோனா வைரஸின் தாக்கம் எதிர்வரும் வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ முடிவிற்கு வருவதற்கான வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொறோனா வைரஸ் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் நோர்த்ஈஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசியர் அலெசேன்ட்ரோ வெஸ்பிக்னானி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் ஒரு நபரிடமிருந்து குறைந்தது நான்கு பேருக்கு பரவும் வாய்ப்புள்ளது.

இது சாதாரண நிலை என்ற போதும், சில நேரங்களில் அதற்கும் மேற்பட்டோருக்கும் பரவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொறோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தனியாக சிகிச்சை வழங்க வேண்டும்.

அத்துடன், முறையாக கைகளை சுத்தம் செய்வதுடன் முகத்திரையை பயன்படுத்துவதன் ஊடாகவும் வைரஸ் தாக்கம் ஏற்படக்கூடியவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு, தொற்று நோய் பரவக்கூடிய எண்ணிக்கையை ஒன்றுக்கு மேற்பட்டதாகக் குறைப்பதன் மூலம் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்பது பேராசிரியர் பேராசிரியர் டேவிட் ஃபிஷ்மேன்னின் கருத்தாகும்.

கொறோனோ வைரஸ் தொற்றால் சீனாவில் இதுவரை 106 பேர் பலியானதுடன் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சீனாவில் கொறோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கும் அதிகம் என பேராசியர் அலெசேன்ட்ரோ வெஸ்பிக்னானி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் இந்த எண்ணிக்கை 40 ஆயிரத்தை விடவும் அதிகரித்துள்ளதாக ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.