Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE..%21+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
Monday, 03 February 2020 - 17:01
இதுவரை நடிக்காத கேரக்டரில் ரஜினியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
415

Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் “தலைவர் 168” திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ்,சூரி,பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இதற்கிடையில் அண்மையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது மற்றுமொரு அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த படத்தில் நடிகை நயன்தாரா இதுவரை நடித்திராத வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதாக நம்பகத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ளது.

முதன் முறையாக லேடி சூப்பர் ஸ்டார் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top