Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE..%21%21
Thursday, 13 February 2020 - 20:13
பின் தள்ளப்பட்டார் ஜஸ்பிரிட் பும்ரா..!!
362

Views
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒருநாள் கிரிக்கட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரப்பட்டியல் முதல் இடத்தில் இருந்த இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் மொத்தமாக 30 ஓவர்களை வீசிய பும்ரா 167 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை.

இந்த நிலையில் குறித்த தரவரிசை பட்டியலில் நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் 727 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அத்துடன் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் முஜீப் உர் ரஹ்மான், தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர் ககிசோ ரபாடா, அவுஸ்திரேலிய அணியின் வீரர்; பட் கம்மின்ஸ் ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதேவேளை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் 869 புள்ளிகளுடன் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top