Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
Friday, 14 February 2020 - 16:15
போதை பொருள் வர்த்தகரை காட்டிக்கொடுத்த பொது மக்கள்...!
2,857

Views
சூரியவெவ - வெவேகம பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கு போதை குளிசைகளை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூரியவெவ காவல் துறை விசேட அதிரடிபடையினரால் நேற்றிரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் விவசாயம் செய்து வந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியிலுள்ள மக்கள் வழங்கிய தகவல்களுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து 58 போதை குளிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

குறித்த குளிசையானது நோயினால் அதிக வலியுடன் காணப்படும் நோயாளிகளுக்கும் நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வைத்தியரின் ஆலோசனைக்கடைய வழங்கப்படவேண்டியது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குளிசைகள் 55 ரூபாய்க்கு மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு இளைஞர் யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபர் சூரியவெவ காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவரை அம்பாந்தோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top