Hirunews Logo
17+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
Friday, 14 February 2020 - 19:01
17 ஆம் திகதிவரை விளக்கமறியலில்...
1,107

Views
கைதுசெய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று மாலை முன்னிலைப்படுத்;தப்பட்டபோது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அவரை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அண்மையில் ஓமான் சென்றிருந்தனர்.

இதன்போது அவரை பொறுப்பேற்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று அதிகாலை 4.37 அளவில் யூ.எல்.208 ரக வானுர்தி மூலம் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அழைத்த செல்லபட்ட அவரிடம், மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top