Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
Friday, 14 February 2020 - 19:24
முக்கிய கலந்துரையாடல் இன்று..
1,027

Views
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஸ்த்தாபிக்கப்படவுள்ள சமத்துவ மக்கள் சக்தியின் சின்னம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நாடாளுமன்ற கட்டிட தொகுதியிலும் கட்சி தலைமையகமான சிறிகொத்தவிலும் இன்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

சஜித் பிரேமதாஸ உள்ளிட்டோர் சமத்துவ மக்கள் சக்தி கூட்டணியை அமைக்க நடவடிக்கை எடுக்கின்ற நிலையில, அனைவரும் இனைந்து ஐக்கிய தேசிய கட்;சியின் யானை சின்னத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது சாதகமானது என ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு யோசனை முன்வைத்திருந்தது.

இந்த முரண்பாட்டை தீர்ப்பதற்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ தரப்பினருக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும் இணக்கப்பாடுகள் ஏற்படவில்லை.

இதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நாடாளுமன்ற கட்டிட தொகுதியி;ல் இன்று இடம்பெற்றது.

புதிய கூட்டணியின் சின்னம் உட்பட எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன் இன்று நள்ளிரவுக்கு முன்னர் யானை சின்னம் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக இருந்துள்ளது.

அவ்வாறில்லாவிட்டால் சமத்துவம் மக்கள் சக்திகட்சியில் இதயம் சின்னத்தில் போட்டியிடுவது என இதன்போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எதிர்கட்சி தலைவர் காரியாலயத்திலும் கட்சி தலைமையகமான சிறிகொத்தவிலும் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்புக்களில் சின்னம் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கருத்துகள் வெளியிடப்பட்டன.

இதேநேரம், சின்னம் தொடர்பான இறுதி பேச்சுவார்த்தை இன்று முற்பகல் 2.30 அளவில் சிறிகொத்தவில் ஆரம்பமானது.

இந்த கலந்துரையாடலில் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான அகில விராஜ் காரியவசம், நவீன் திஸாநாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோரும் எதிர்;கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, மங்கள சமரவீர, கபீர் ஹாசிம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இந்த கலந்துரையாடல் சுமுகமாக இடம்பெற்றுது என அதில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

இதேநேரம், இந்த குழு எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடி ஆராயும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், எமது செய்தி சேவையிடம் தகவல் வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் சின்னம் தொடர்பில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக சட்டத்தரணிகள் குழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்;டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து வேட்புமனுவை பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top