Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+28+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D..
Friday, 14 February 2020 - 19:35
எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில்..
505

Views
கடந்த ஆட்சிக்காலத்தில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எழுத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட வெள்ளவத்தை வீடு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதீயுதினின் மனைவிக்கு சொந்தமானது என நீதிமன்றில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் கல்கிசை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு செய்ய எதிர்பார்ப்பதாக கல்கிசை பிரதான நீதவான் மொஹமட் மிலால் முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், குறித்த வீட்டில் இருந்து கைது செய்யப்பட்ட இம்ரான் மொஹமட் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவருக்கு எதிராக பணச்சலவை குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தையில் உள்ள வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்களுள் 9 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான பண உறுதிப்பத்திரத்தை பெறுமதி 9 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா என குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top