தீர்மானத்தை கைவிட்ட தென்னாபிரிக்கா..

Friday, 14 February 2020 - 19:46

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE..
பாகிஸ்தானுடன் மூன்று 20 க்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் தீர்மானத்தை தென்னாபிரிக்கா கைவிட்டுள்ளது.

இந்திய அணியுடன் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கிரிக்கட் தொடருடன் வீரர்களுக்கு ஏற்படும் பணிச்சுமையின் காரணமாக தென்னாபிரிக்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணி தற்போது, இங்கிலாந்துடனான 20 க்கு 20 தொடரில் பங்கேற்றுள்ளது.

இதையடுத்து, அவுஸ்திரேலியாவுடன் மூன்று 20 க்கு 20 மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணி பங்கேங்கவுள்ளது.

பின்னர், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மார்ச் 12 ஆம் திகதி முதல் மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்க அணி விளையாடவுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு திட்டமிட்டிருந்த 20 க்கு 20 தொடரை தென்னாபிரிக்க அணி கைவிட்டுள்ளது.

இரண்டு கிரிக்கட் சபைகளின் தீர்மானங்களுக்கு அமைய குறித்த தொடர் மீள் திட்டமிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.