வாட்ஸ் அப் பயன்படுத்வோர் எண்ணிக்கை இத்தனை கோடியா..?

Saturday, 15 February 2020 - 6:27

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE..%3F
“வாட்ஸ் அப்“ பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டின் இறுதியில் 200 கோடியை எட்டி புதிய மைல்கல்லை அடைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடக தளமான “வாட்ஸ் அப்” நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் 2014ஆம் ஆண்டு வாங்கியது. இந்த தகவல் அனுப்பும் செயலியை 2016ஆம் ஆண்டு உலகளவில் 100 கோடி பேர் பயன்படுத்தினர்.

அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 150 கோடியாக உயர்ந்தது. 2019ஆம் ஆண்டின் இறுதியில் இது 200 கோடியை எட்டி புதிய மைல்கல்லை அடைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சமூக ஊடக தளங்களில் வாட்ஸ் அப் 2வது இடத்தை பிடித்துள்ளது. அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் 250 கோடி தீவிர பயன்பாட்டாளர்களுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.