அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள விடயம்

Saturday, 15 February 2020 - 7:51

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மீண்டும் விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பு முகத்துவார பகுதியில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கட்டிடத் தொகுதியில் மீன் விற்பனை நிலையத்தை நேற்று ஆரம்பித்து வைத்து அவர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தரமான கடலுணவுகள் மக்களை சென்றடைய வேண்டும்.

இதேபோன்ற விற்பனை நிலையங்களை நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதன் மூலம் மக்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு பங்களிப்பு செய்ய முடியும்.

புதிய அரசாங்கம், அரச கட்டமைப்புக்கள் அனைத்தையும் மீண்டும் வினைத்திறன் மிக்கவையாக மாற்றும் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சு மற்றும் அதனுடைய அதிகாரத்திற்குட்பட்ட ஏனைய நிறுவனங்களை மீளக் கட்டியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.