வான் தாக்குதலில் 32 பொதுமக்கள் பலி..

Sunday, 16 February 2020 - 8:26

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+32+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
யேமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் 32 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

யேமனின் அல்ஜவாப்  மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இந்த வான் தாக்குதலை நடத்திய போர் விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2015 ஆண்டு முதல் யேமன் அரச படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டு போர் இடம்பெற்றுவருகின்றது.

இந்த உள்நாட்டுப்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு வழங்கி வரும் அதேவேளை, யேமன் அரச படையினருக்கு சவுதி கூட்டுப்படையினர் ஆதரவு வழங்கி தொடர்ந்தும் அங்கு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

குறித்த உள்நாட்டு போரினால் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.