பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மூன்று தினங்களில் வீழ்ச்சி.!

Sunday, 16 February 2020 - 13:15

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.%21
கொவிட் 19 தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று தினங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 2 ஆயிரத்து 9 பேர் குறித்த நோய்த் தொற்றில் சீனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 142 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேநேரம், இதுவரை கொவிட் 19 தொற்று காரணமாக ஆயிரத்து 665 பேர் சீனாவில் பலியானதுடன் 68 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சீனாவுக்கு வெளியில் 30 நாடுகளை சேர்ந்த 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொற்று காரணமாக பிரான்ஸ், ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் 4 பேர் பலியாகினர் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.