பம்பரகஹவத்த வனத்திற்கு தீ வைத்த 6 சந்தேக நபர்கள் கைது

Sunday, 16 February 2020 - 16:18

%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+6+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
நாஉல, புப்பிலிய, பம்பரகஹவத்த வனத்திற்கு சட்டவிரோதமான முறையில் தீ வைத்ததாக தெரிவிக்கப்படும் 6 சந்தேக நபர்களை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து இறந்த நிலையில் உள்ள 8 உடும்புகளையும் வனவிலங்கு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் புப்பிலிய, மாலகமுவ, கல்வேல மற்றும் மனன்வத்த ஆகிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த உடும்புகளை வேட்டையாடி பிரதேச மக்களுக்கும், விழாக்களுக்கு வருபவர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் அனைவரும் நாவுல காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் நாஉல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.