உலக வங்கி இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்

Monday, 17 February 2020 - 7:37

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உலக வங்கி தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியினால் மேற்கொள்ளப்படும் அபிவருத்தி திட்டங்களை நேரடி கண்காணிப்பு செய்யும் அதேவேளை, விவசாய மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளில் இலங்கை அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் நவீன நடைமுறைகளை மேற்கொள்வதன் மூலம் எதிர்கால பொருளாதார சுபீச்சத்தை எட்ட முடியும் என உலக வங்கியின் தெற்காசிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் போக்குவரத்து மற்றும் சுத்தமான குடிநீரை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது எனவும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.