Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D..%21
Monday, 17 February 2020 - 12:01
தோட்டத்திற்கு சென்ற பசுக் கன்றுக்கு நேர்ந்த பரிதாபம்..!
9,929

Views
பசுக் கன்று ஒன்று தோட்டத்திற்குள் நுழைந்த காரணத்தால், கோபமடைந்த தோட்ட உரிமையாளர் அதை அடித்து கொன்று எரித்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் கன்று கத்தும் சத்தம் கேட்ட அதன் உரிமையாளர், பக்கத்து தோட்டத்துக்கு சென்று பார்த்த போதே குறித்த விடயம் அவருக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து பசுக் கன்றின் உரிமையாளர் காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மின்னேரிய பகுதியில் வசித்து வரும் 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மின்னேரிய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top