புதிய கூட்டணியின் சின்னம் தொடர்பில் இறுதி தீர்மானம்

Monday, 17 February 2020 - 13:12

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் சின்னம் தொடர்பில் இறுதி தீர்மானம், இரண்டு தரப்பினரால் நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணிகள் குழுவால் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிற்கு அறிவிக்கப்படவுள்ளது.

சமத்துவ தேசிய சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணிகள் குழு தற்சமயம் அது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் தமது தீர்மானத்தை நாளை மறுதினம் கூடவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாக அவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

சமத்துவ தேசிய சக்தியினால் இதயம் சின்னம் கோரப்பட்டிருந்தாலும் குறித்த சின்னம் பட்டியலில் இல்லாத காரணத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழு அதனை நிராகரித்தது.

இதேவேளை அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவாலும் நியமிக்கப்பட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் கூடவுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்குள் தமக்கு ஆதரவு வழங்கும் சகல தரப்பினரையும் ஒன்றினைத்து கூட்டணியாக எதிர்வரும் பொதுத்தேர்தலை முகங்கொடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடல்களில் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, சகலரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு சின்னத்தி;ல் போட்டியிடுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.

எனவே அதிபட்சமாக அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணா திலக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி அமைப்பது புதிய விடயமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தி சேவைக்கு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கோரியிருந்தனர்

இருப்பினும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடமபெற்று வருகின்றது.

ஆகவே விரைவில் அது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.