அரசாங்கம் சமர்ப்பித்த ஆவணங்கள் தொடர்பில் மேல்போர்ன் நீதிமன்றம் அதிருப்தியில்...

Monday, 17 February 2020 - 13:03

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...+
அவுஸ்திரேலியாவின் பிலோயிலா நகரில் வசித்து வந்த நிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள இலங்கை குடும்பம் குறித்த மாற்றியமைக்கப்பட்ட ஆவணங்களை அந்த நாட்டு அரசாங்கம் சமர்ப்பித்தமை தொடர்பில் மேல்போர்ன் நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

பிரியா மற்றும் நடேசன் தம்பதிகளை நாடு கடத்த அந்த நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இறுதி மனுவின் விசாரணை இன்று இடம்பெறுகிறது.

இந்த வழக்கில் வாதிகள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி ஏஞ்சல் எலக்சோவிடம் அரசாங்கம், மாற்றியமைக்கப்பட்ட ஆவணங்களை கையளித்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான பல விபரங்கள் நீக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உண்மையான ஆவணத்தை இன்றைய தினத்திற்குள் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கு முழு நாள் விசாரணைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.